குறுந்தொகை
8 months ago
1 min read
இந்நூல் 4 முதல் 8 அடிகள் வரை கொண்டுள்ளது.
குறுகிய அடிகளைக் கொண்டதால் குறுந்தொகை எனப்பட்டது.
குறுமை + தொகை = குறுந்தொகை
அகத்திணை, ஆசிரியப்பாவகை, 400 பாடல்களைக் கொண்டு, 205 புலவர்களால் பாடப்பட்டது.
இந்நூலை தொகுத்தவர் "பூரிக்கோ", தொகுப்பித்தவர் தெரியவில்லை.
இந்நூலில் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.

20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
இந்நூலை முதலில் புதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.
முதலில் வெளியிட்டவர் - சௌரி பெருமாள் அரங்கனார்.
"பாரதம் பாடிய பெருந்தேவனார்" இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்.
இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் - முருகன்
குறுந்தொகை பாடிய புலவர்கள்
- அணிலோடு முன்றிலார்
- காக்கைப் பாடினியார்
- குப்பைக்கோழியார்

எட்டுத்தொகையில் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
பரணர், மாமூலனார் வரலாற்றுப் புலவர்கள் ஆவார்கள்.
பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
குறுந்தொகை உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
இந்நூலில் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இந்நூலில் 307, 391 ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
இந்நூலின் வேறு பெர்கள்
- நல்ல குறுந்தொகை
- குறுந்தொகை நானூறு
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!