17

Tnpsc General Tamil Online Notes - 016

"TNPSC General Tamil Online Notes - 16 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 20 min read
Tnpsc General Tamil Online Notes - 016

Tnpsc General Tamil Online Notes - 016

TNPSC General Tamil Online Notes - 16 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

“மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட... “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • திருவள்ளுவமாலை
  • தமிழோவியம்
  • பிங்கல நிகண்டு
  • நன்னூல்
Ans:- B
2.

"குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ “ இதில் கூறப்படும் மூன்று இனங்கள் எவை?

  • துறை, தாழிசை, விருத்தம்
  • குறம், பள்ளு, பா
  • செறிவு, சமநிலை, தெளிவு
  • சத்துவம், இராசசம், தாமசம்
Ans:- A
3.

பொருத்துக
இரும்போந்து i) பருத்த பனைமரம்
சந்து ii) சந்தன மரம்
நாகம் iii) நாகமரம்
காஞ்சி iv) ஆற்றுப்பூவரசு

  • i ii iii iv
  • iii ii i iv
  • iv iii ii i
  • iii ii iv i
Ans:- A
4.

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது _____ துறை .

  • இயன் மொழித் துறை
  • பொதுவியல் துறை
  • பொருண்மொழிக் காஞ்சித் துறை
  • பாடாண் துறை
Ans:- C
5.

கீழ்க்கண்டவற்றுள் கூட்டு வினைகனின் மூன்று வகைகள் யாவை?
1.பெயர்+ வினை = வினை 2. வினை + வினை = வினை
3. இடை + வினை = வினை 4. இடை + இடை = வினை

  • 1, 2, 3
  • 2, 3, 4
  • 1 , 3, 4
  • 1, 2,4
Ans:- A
6.

சிலப்பதிகாரத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது ?

  • காதை 1 - அடி 102
  • காதை 41 - அடி 16
  • காதை 5 - அடி 102
  • காதை 6 - அடி 102
Ans:- C
7.

சரியான இணையைத் தேர்ந்தெடு
கடைபிடித்தல் –பின்பற்றுதல்
கடைப்பிடித்தல் – கடையைப்பிடித்தல்

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • இரண்டும் தவறு
Ans:- D
8.

பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – பொருத்துங்கள்

  • பொருத்து + உங்கள்
  • பொருத்து + உம் + கள்
  • பொரு+த் + உங்கள்
  • பொரு + து + உங்கள்
Ans:- B
9.

கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?

  • வளர்மதி அவர்கள் அரியலூரில் பிறந்தவர் .
  • 2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார்.
  • இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார்.
  • 2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
Ans:- B
10.

பொருத்துக
முத்துலெட்சுமி i) உயர்வு
பண்டித ரமாபாய் ii) புரட்சி
இராமாமிர்தம் iii) துணிவு
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் iv) அறிவு
சாவித்திரிபாய் பூலே v) சிறப்பு

  • iii i ii v iv
  • iii ii i iv v
  • ii i iii v iv
  • i ii iii iv v
Ans:- C
11.

சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

  • 1919
  • 1939
  • 1929
  • 1949
Ans:- C
12.

தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?

  • முசிறி
  • கொற்கை
  • தொண்டி
  • காவிரிப்பூம்பட்டினம்
Ans:- B
13.

பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
பரங்குன்ற முருகன் நின்னசோலை "
என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன

  • மதுரைக் காஞ்சி
  • நான்மாடக்கூடல்
  • காவடிச் சிந்து
  • நொண்டிச்சிந்து
Ans:- B
14.

ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்

  • மதுரை
  • திருநாதர்குன்று
  • திருப்பரங்குன்றம்
  • வேலூர்
Ans:- B
15.

இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி

  • 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • 4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • 5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
Ans:- B
16.

“சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவக சிந்தாமணி
  • வளையாபதி
Ans:- C
17.

இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி

  • பெயரெச்சம்
  • வியங்கோள் வினைமுற்று
  • வினையெச்சம்
  • வினைத்தொகை
Ans:- C
18.

'பெருமரத்துடன் போட்டியிடுகிறது' என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?

  • கமுகு
  • தென்னை
  • பனை
  • மூங்கில்
Ans:- A
19.

ந.பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?
வழக்குறைஞர்
ஆசிரியர்
உயர்நீதிமன்ற நீதிபதி
இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்

  • 1, 2
  • 1, 3
  • 1, 2, 3
  • 1, 4
Ans:- D
20.

“ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?

  • மல்லர்
  • மணக்குடவர்
  • பரிப்பெருமாள்
  • பரிதி
Ans:- C
21.

"நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?

  • 27
  • 28
  • 37
  • 38
Ans:- C
22.

விரைந்து கெடுபவன் யார்?.

  • பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
  • பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
  • பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
  • பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
Ans:- D
23.

ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் துணையாசிரியராக பணியாற்றிய நாளிதழ்

  • கணையாழி
  • தினமணி
  • அ, ஆ இரண்டும்
  • தினமலர்
Ans:- B
24.

"நூபுரத்துத் தொனி வெடிக்கும் – பத
நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்

  • திருமலை முருகன் பள்ளு
  • காவடிச் சிந்து
  • ஐங்குறுநூறு
  • சிலப்பதிகாரம்
Ans:- B
25.

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது

  • தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
  • மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
  • தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
  • மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
Ans:- A
26.

" மனிதனின் பேச்சுத் திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு

  • 1881
  • 1886
  • 1868
  • 1861
Ans:- D
27.
Tnpsc General Tamil Online Notes - 016-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்

  • புறநானூறு – 188
  • புறநானூறு – 183
  • அகநானூறு – 188
  • அகநானூறு – 183
Ans:- B
28.

பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு

  • 1826
  • 1835
  • 1854
  • 1857
Ans:- C
29.

புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்

  • துய்ப்ளே
  • துய்மா
  • டூமாஸ்
  • லெபூர் தொனே
Ans:- B
30.

"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்

  • அண்ணா
  • திரு.வி.க
  • உ.வே.சா
  • வ.வே.சு
Ans:- C
31.

"கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர்

  • பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
  • முதலாம் நரசிம்மவர்மன்
  • கோவிந்தசாமி
  • இராசசிம்மன்
Ans:- A
32.

ண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.

  • ஃபாஸ்ட் ஓவியங்கள்
  • ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்
  • ஃப்ரஷ் ஓவியங்கள்
  • மேற்கண்ட எதுவுமில்லை
Ans:- B
33.

கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகள் எவை?
ரத்னா பாயின் ஆங்கிலம்
ஒரு புளியமரத்தின் கதை
செம்மீன்
காகங்கள்

  • அனைத்தும் சரி
  • 1, 2, 4
  • 1, 2, 3
  • 1, 4
Ans:- D
34.

'' அழைத்தான் >>>அழை + த் + த் + ஆன் "
இதில் ‘ த் + த்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் முறையே

  • இறந்தகால இடைநிலை, சந்தி
  • சந்தி, இறந்தகால இடைநிலை
  • சாரியை, இறந்தகால இடைநிலை
  • இறந்தகால இடைநிலை, சாரியை
Ans:- B
35.

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு " என்று கூறியவர் யார்?

  • பாரதிதாசன்
  • குமட்டூர்க் கண்ணனார்
  • திருவள்ளுவர்
  • ஒளவையார்
Ans:- C
36.

கீழ்க்கண்டவற்றுள் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?

  • குண்டலினி சக்தி
  • அமுதம்
  • மாங்காய்ப் பால்
  • அமுதப்பால்
Ans:- C
37.

பொருத்துக.
ஈசத்துவம் i) படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
பிராகாமியம் ii) இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
காமாவசாயித்வம் iv) விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
வசித்வம் v) உலகப்படைப்புகளை அடக்கி ஆளும் ஆற்றல்

  • i ii iii iv
  • ii i iv iii
  • iv iii ii i
  • iv ii iii i
Ans:- A
38.

"நிற்கின்றாய் >>> நில் ( ற் ) + கின்று + ஆய் " என்பதில் 'ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?

  • முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
  • முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
  • தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
  • படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
Ans:- B
39.

இலக்கணக் குறிப்புத் தருக .
உருட்டி, ஏகுமின்

  • பெயரெச்சம், வினையெச்சம்
  • வினையெச்சம், பெயரெச்சம்
  • வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
  • பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
Ans:- C
40.

இலக்கணக் குறிப்புத் தருக
வாய்க்கால், ஏகுதி

  • உரிச்சொற்றொடர் , வினையெச்சம்
  • பெயரெச்சம், வினையெச்சம்
  • இலக்கணப்போலி, ஏவல் ஒருமை வினைமுற்று
  • பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று
Ans:- C
41.

ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?

  • பேரழகு
  • காலத்தச்சன்
  • உழுதுழுது
  • சென்ற
Ans:- A
42.

பொருத்துக.
பியர் பால் ப்ரோக்கா i) பிரெஞ்சு சர்ஜன்
நோம் சோம்ஸ்கி ii) அமெரிக்க உளவியல் மொழியியலாளர்
ஆட்டோ டியட்டர்ஸ iii) ஜெர்மானியர்
க்வாபெனா போஹென் iv) ஸ்டான்போர்டு பேராசிரியர்

  • i ii iii iv
  • iii i ii iv
  • ii i iii iv
  • ii i iv iii
Ans:- A
43.

காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி

  • மெகஸ்தனிஸ் - சீன பயணி
  • மெகஸ்தனிஸ் - இத்தாலிய பயணி
  • யுவான் சுவாங் – இத்தாலிய பயணி
  • யுவான் சுவாங் – சீனப் பயணி
Ans:- D
44.

மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ள மூளையின் பாகம்

  • முன்மூளை
  • பின் மூளை
  • நடு மூளை
  • முதுகுத் தண்டு
Ans:- A
45.

புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.

  • இங்கிலாந்து
  • மணிலா
  • போர்ச்சுக்கல்
  • இலங்கை
Ans:- B
46.

செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு

  • அரிக்கமேடு கல்வெட்டு
  • மண்டகப்பட்டு கல்வெட்டு
  • மகாபலிபுரம் கல்வெட்டு
  • சித்தன்னவாசல் கல்வெட்டு
Ans:- B
47.

வடமொழியில் " மலய " என்ற சொல் எப்பகுதியில் உள்ள மலைகளை குறிக்கிறது

  • மலபாருக்கு கிழக்கே உள்ள மலைகளை
  • மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை
  • மலபாருக்கு வடக்கே உள்ள மலைகளை
  • மலபாரை சுற்றியுள்ள மலைகளை
Ans:- B
48.

சரியான பொருளைத் தேர்ந்தெடு
மடிவு , வட்டம்

  • மடிப்பு , எல்லை
  • சோம்பல் , எல்லை
  • மடிப்பு , உருவம்
  • பணிவு ,எல்லை
Ans:- B
49.

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?

  • காந்தி
  • நேரு
  • தெறென்ஸ்
  • கோர்டன் ஆல்போர்ட்
Ans:- D
50.

தெலுங்கு , கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது .

  • சோழர்கள் காலம்
  • பாண்டியர்கள் காலம்
  • நாயக்கர் காலம்
  • விஜயநகர மன்னர் காலம்
Ans:- D
51.

சரியானவற்றைக்காண்க
1.யான்+கு= எனக்கு

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


2.யான்+ கண்= என்னின்கண்
3.யான்+அது= என்னது
4.யான்+ஆல்= என்னால்

  • 2, 3 சரி
  • 1, 2 சரி
  • 1, 4 சரி
  • நான்கும் சரி
Ans:- C
52.

அறவணஅடிகள் ‘அறிவுண்டாகுக’ என யாரை எல்லாம் வாழ்த்தினார்?

  • அரசமாதேவி, தோழியர் கூட்டம்
  • சித்திராபதி
  • மணிமேகலை
  • அனைவரையும்
Ans:- D
53.

'சாதியும்மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ - எனப் பாடியவர்

  • திருமூலர்
  • பெரியார்
  • வள்ளுவர்
  • வள்ளலார்
Ans:- D
54.

'Charity begins at home’ என்பதற்குஇணையான தமிழ்ப் பழமொழி

  • தன்கையே தனக்குதவி
  • அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
  • தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
  • வீட்டிலேயே தானம் செய்
Ans:- C
55.

பெருமாள் திருமொழியில் _______ பாசுரங்கள் உள்ளன

  • இருநூற்றைந்து
  • நூற்றைந்து
  • நூறு
  • பதினெட்டு
Ans:- B
56.

"எல்லாமனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்

  • பெரியார்
  • அண்ணல் அம்பேத்கர்
  • காந்தியடிகள்
  • திரு.வி.க
Ans:- B
57.

பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
வினைத்தொகை

  • பொங்குதாமரை
  • பூதரப்புயம்
  • அலைகடல்
  • அகல்முகில்
Ans:- B
58.

ஒருமைபன்மை பிழைகளை நீக்குக நான் வாங்கிய நூல் இது அல்ல

  • நான் வாங்கிய நூல் இஃது அல்ல
  • நான் வாங்கிய நூல் இஃது அன்று
  • நான் வாங்கிய நூல் இது அன்று
  • நான் வாங்கின நூல் இது அன்று
Ans:- B
59.

"நிலத்தினும்பெரிதே வானினும் உயர்ந்தன்று “ என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்

  • நற்றிணை
  • ஐங்குறுநூறு
  • குறுந்தொகை
  • அகநானூறு
Ans:- C
60.

திருத்தொண்டர்புராணம் எனும் பெரிய புராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?

  • திருத்தொண்டத்தொகை
  • திருவாசகம்
  • திருமந்திரம்
  • திருக்கோவையார்
Ans:- A
61.

சுருதிமுதல் - என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது

  • யூதர்
  • இயேசு நாதர்
  • சீடர்
  • குற்றவாளி
Ans:- B
62.

திரு.வி.கவின் செய்யுள் நூல்கள்

Tnpsc General Tamil Online Notes - 016-1

1.உரிமைவேட்டல்
2.சைவத்திறவு
3.பொருளும் அருளும்
4.கடவுட்காட்சியும் தாயுமானவரும்

  • 2, 3 – சரி
  • 1, 2 சரி
  • 1, 3 சரி
  • நான்கும் சரி
Ans:- C
63.

எழுத்துஎன்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல்கள்

  • நற்றிணை, குறுந்தொகை
  • அகநானூறு, புறநானூறு
  • பரிபாடல், குறுந்தொகை
  • குறுந்தொகை, புறநானூறு
Ans:- C
64.

பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
உரிச்சொற்றொடர்

  • நெடுநாவாய்
  • நனி கடிது
  • நன்னுதல்
  • நின்கேள்
Ans:- B
65.

உடற்பிணியைப்போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்
அகத்தியர்
தேரையர்
போகர்
புலிப்பாணி

  • 1, 4 சரி
  • 1, 3, 4 சரி
  • 2, 4 சரி
  • 1, 2, 3, 4 சரி
Ans:- D
66.

விடைக்கேற்றவினாவைக் கண்டறிக.

  • திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
  • திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப் படம் எடுப்பது கடினமான பணியாகும்?
  • திரைப்படம் எடுப்பதனை விட கடினமான பணி எது?
  • திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?
Ans:- A
67.

கொடுக்கப்பட்டசொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க

  • மான்குட்டி
  • சிங்கக் குருளை
  • கீரிக்குட்டி
  • கழுதை கன்று
Ans:- B
68.

பழையஇலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்து தற்போது வழக்கில் இல்லாத எழுத்துக்கள்

  • ஞ், ந், வ்
  • ஞ், ண், ந்
  • ஞ், ண், ன்
  • ஞ், ன், ழ்
Ans:- A
69.

‘ங்' என்னும்மெல்லின மெய் ‘ஙனம்' என்னும் சொல்லில் கீழ்க்கண்ட எந்த பொருளில் வரும்

  • வீதம்
  • விதம்
  • அங்கு
  • இங்கு
Ans:- B
70.

தமிழ்அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கிய ஆண்டு

  • 1958
  • 1938
  • 1982
  • 1983
Ans:- D
71.

ஆற்றவும்கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை" என்ற வரிகளை இயற்றியவர்

  • ஒளவையார்
  • முன்றுறை அரையனார்
  • சமண முனிவர்கள்
  • கம்பர்
Ans:- B
72.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

  • மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
  • பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
  • பெர்னார்ட் ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
  • டால்ஸ்டாய் – ஆங்கில நாடக ஆசிரியர்
Ans:- D
73.

"அறிவுஎன்பது வளர்ந்து கொண்டே இருக்கும்; எனவே, புதியவற்றை ஏற்க வேண்டும்" என்று கூறியவர் யார்?

  • அம்பேத்கர்
  • பெரியார்
  • அம்புஜத்தம்மாள்
  • நேரு
Ans:- B
74.

"ஆங்கிலமோபிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாண்கின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி” என்று கூறியவர்

  • ந.பிச்சமூர்த்தி
  • முடியரசன்
  • மீரா
  • கண்ணதாசன்
Ans:- B
75.

கரிகாலன்முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்று கூறும் நூல்

  • புறநானூறு
  • பதிற்றுப்பத்து
  • பட்டினப்பாலை
  • மதுரைக்காஞ்சி
Ans:- A
76.

இந்தியாவில்எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன? அவற்றுள் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

  • 12, 353
  • 12, 325
  • 13, 325
  • 12, 353
Ans:- B
77.

கரிசலாங்கண்ணிகுணமாக்கும் நோய்களில் சரியானது எது?
இரத்தசோகை
நரையைபோக்கும்
செரிமானகோளாறு
மஞ்சள்காமாலை
கண்பார்வை

  • 1, 2, 5 சரி
  • 2, 3, 4 சரி
  • 2, 4, 5 சரி
  • அனைத்தும் சரி
Ans:- D
78.

வெறியாட்டுப்பறை, தொண்டகப்பறைஆகியவை எந்நிலத்துடன் தொடர்புடையது

  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
Ans:- A
79.

வடக்குஎன்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும் போது

  • நிலைமொழி ஈறு நீங்கும்
  • நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
  • வருமொழி முதல் கெடும்
  • நிலைமொழி முதல் கெடும்
Ans:- B
80.

கீழ்க்கண்டவற்றுள்தாராபாரதி எழுதாத நூலினைத் தேர்ந்தெடு

  • புதிய விடியல்கள்
  • விரல்நுனி வெளிச்சங்கள்
  • பூமியைத் திறக்கும் பொன்சாவி
  • இமயம் எங்கள் காலடியில்
Ans:- D
81.

பெண்களின்தெரிவை பருவ வயது

  • 8 – 11
  • 12 – 13
  • 20 – 25
  • 26 – 32
Ans:- D
82.

இணையத்திற்குவித்திட்ட ஜான்பாஸ்டல் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்

  • சுவிட்சர்லாந்து
  • இங்கிலாந்து
  • பிரான்சு
  • அமெரிக்கா
Ans:- A
83.

தில்லியிலுள்ளதிகார் சிறைச்சாலையின் நிலைப்பற்றி கண்டறிந்து வெளியிட்டப் பத்திரிக்கை

  • தி இந்து
  • இண்டியன் எக்ஸ்பிரஸ்
  • லண்டன் டைம்ஸ்
  • இண்டியன் டைம்ஸ்
Ans:- B
84.

மீசைக்கும்கூழுக்கும் ஆசைப்பட்டு மேல் விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் என்று பாடியவர்

  • பாரதிதாசன்
  • முடியரசன்
  • சச்சிதானந்தன்
  • பாரதியார்
Ans:- B
85.

செல்வமும், உழைப்பும்இல்லாத கல்வி களர்நிலம் என்று கூறியவர்

  • அம்பேத்கர்
  • காமராசர்
  • பெரியார்
  • காந்தியடிகள்
Ans:- A
86.

செய்வாயா? என்னும்வினாவிற்கு கை வலிக்கும் எனத் தனக்கு வரப்போவதனை கூறுவது

  • இனமொழி விடை
  • உறுவது கூறல் விடை
  • உற்றதுரைத்தல் விடை
  • வினா எதிர்வினாதல் விடை
Ans:- B
87.

திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை____

  • 568
  • 865
  • 685
  • 658
Ans:- D
88.

பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர்

  • வள்ளலார்
  • முத்துராமலிங்க தேவர்
  • பெரியார்
  • காமராஜர்
Ans:- B
89.

ஊரும்பேரும், தமிழினம் என்ற நூலை எழுதியவர்

  • மீனாட்சி சுந்தரனார்
  • ரா.பி.சேதுப்பிள்ளை
  • உ.வே.சா
  • பாவாணர்
Ans:- B
90.

ஆர்கலிஉலகத்து என ஒவ்வொரு பத்துப் பாடல்களுக்கும் ஒருமுறை தொடங்குவது

  • முதுமொழிக் காஞ்சி
  • முதுமொழி மாலை
  • முகுந்த மாலை
  • பழமொழி நானூறு
Ans:- A
91.

காந்தியடிகள்தலைமையேற்ற இலக்கிய மாநாடு சென்னையில் எப்போது நடைபெற்றது

  • 1935
  • 1937
  • 1939
  • 1940
Ans:- B
92.

காந்தியடிகளிடம்உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சிதம்பரம்
Ans:- B
93.

எந்தஇடத்தில் நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்?

  • இராமநாதபுரம்
  • திருநெல்வேலி
  • திண்டுக்கல்
  • காளையார்கோவில்
Ans:- D
94.

சரியானபொருளைத் தேர்ந்தெடு.
பூதலம், கும்பி

  • மலர், மழை
  • சோலை, வயிறு
  • பூமி, வயிறு
  • பூமி, மழை
Ans:- C
95.

"பூதலந்தன்னை நரகம் அது ஆக்கிடும்
புத்தியை விட்டுப் பிழையும் ஐயா" என்ற பாடலை இயற்றியவரின் காலம்

  • 18ம் நூற்றாண்டு
  • 19ம் நூற்றாண்டு
  • 20ம் நூற்றாண்டு
  • சங்க காலம்
Ans:- C
96.

தோட்டத்தில்மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி”
என்ற பாடலை பாடியவர்

  • பாரதிதாசன்
  • கவிமணி
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
97.

தமிழன்என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இவக்கியம் எது?

  • தொல்காப்பியம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • அப்பர் தேவாரம்
Ans:- D
98.

‘இடப்புறம்’ என்றசொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

  • இடது + புறம்
  • இடன் + புறம்
  • இட + புறம்
  • இடப் + புறம்
Ans:- A
99.

'நிலம்தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் " எனக் கூறும் நூல்

  • கார்நாற்பது
  • தொல்காப்பியம்
  • பதிற்றுப்பத்து
  • நற்றிணை
Ans:- B
100.

தவறானஇணையைத் தேர்ந்தெடு

  • கொங்கு – தேன்
  • திகிரி – ஆணைச் சக்கரம்
  • அளி – கருணை
  • நாமநீர் -அச்சம் தரும் கடல்
Ans:- A
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 009
Tnpsc General Tamil Online Notes - 009 Tnpsc General Tamil Online Notes - 009 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 018
Tnpsc General Tamil Online Notes - 018 Tnpsc General Tamil Online Notes - 018 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 024
Tnpsc General Tamil Online Notes - 024 Tnpsc General Tamil Online Notes - 024 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 021
Tnpsc General Tamil Online Notes - 021 Tnpsc General Tamil Online Notes - 021 TNPSC General Tamil Online N…
Post a Comment
Search
Menu
Theme
Share