17

Tnpsc General Tamil Online Notes - 020

"TNPSC General Tamil Online Notes - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 20 min read
Tnpsc General Tamil Online Notes - 020

Tnpsc General Tamil Online Notes - 020

TNPSC General Tamil Online Notes - 20 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i) வேப்பங்கொட்டை
ii) முருங்கை இலை
iii) புங்கன்
iv) உளுந்து
v) பிரண்டை

  • ii , iii
  • ii, iv
  • ii, iv , v
  • ii ,iv
Ans:- D
2.

டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?

  • காசிரங்கா புலி
  • காசிரங்கா சிங்கம்
  • காசிரங்கா குரங்கு
  • காசிரங்கா காண்டாமிருகம்
Ans:- D
3.

பொருத்துக
எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
பஞ்சம் iv) இனமிகல்

  • ii i iv iii
  • iii i ii iv
  • i ii iii iv
  • i iv iii ii
Ans:- C
4.

பொருத்துக.
மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை–கேரளம்
மல மூத்தன் iv) ஜார்கண்ட்

  • i ii iii iv
  • ii i iii iv
  • i iv iii ii
  • iv iii ii i
Ans:- D
5.

மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • கர்நாடகா
Ans:- D
6.

உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்" என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்

  • நீலகேசி வாத சருக்கம்
  • மொக்கல வாத சருக்கம்
  • புத்த வாத சருக்கம்
  • ஒலிச் சருக்கம்
Ans:- C
7.

சரியான இணை எது?
ரோமர் – ஒலியின் திசைவேகம்
பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • அனைத்தும் தவறு
Ans:- D
8.

இலக்கணக்குறிப்புத் தருக .
அரும்பும் மலரும், வெப்பம் குளிர்

  • உம்மைத் தொகை, எண்ணும்மை
  • எண்ணும்மை, உம்மைத் தொகை
  • எண்ணும்மை ,பண்புத்தொகை
  • பண்புத்தொகை, எண்ணும்மை
Ans:- B
9.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்

  • புறநானூறு – 188
  • புறநானூறு – 183
  • அகநானூறு – 188
  • அகநானூறு – 183
Ans:- B
10.

இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது

  • தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்.
  • 1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்
  • ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்
  • இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்
Ans:- B
11.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து

  • மெலி +த்(ந்) + த் + உ
  • மெலி + த் + த்(ந்) + உ
  • மெலிந்து+உ
  • மெலிந்+த்+உ
Ans:- A
12.

கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?

  • எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்
  • ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்
  • நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்
Ans:- C
13.

ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.

  • ஏ, கே, இன், எ
  • ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
  • ஏ, கே, ஈ, இன், ஐ
  • எ , ஈ, இன்
Ans:- B
14.

"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்

  • நிரை நேர்
  • நிரை நிரை
  • நேர் நிரை
  • நேர் நேர்
Ans:- C
15.

திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.

  • 51
  • 38
  • 58
  • 85
Ans:- B
16.

இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
எப்படிப் பெயரிடுவேன் ?
இந்தியா 24 மணி நேரம்
காற்றைத் தவிர ஏதுமில்லை

  • அனைத்தும்
  • 1, 2
  • 1 , 3
  • 2 , 3
Ans:- C
17.

இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?

  • பத்ம பூஷண்
  • பத்ம விபூஷண்
  • பத்மஸ்ரீ
  • துரோணாச்சார்யா விருது
Ans:- B
18.

பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"

  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன்
  • நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன்
Ans:- C
19.

“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?

  • ம.லெ.தங்கப்பா
  • ஏ.கே.ராமானுஜம்
  • ஆல்பர்காம்யு
  • பிரம்மராஜன்
Ans:- B
20.

பொருத்துக
அந்நியன் i) ஆல்பர்காம்யு
உருமாற்றம் ii) காப்கா
சொற்கள் iii) ழாக் பிரவர்
குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
உலகக் கவிதைகள் v) எக்சு பெரி

  • I ii iii iv v
  • i iii ii v iv
  • i ii iii v iv
  • i iv v iii ii
Ans:- C
21.

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • அகநானூறு
Ans:- C
22.

"வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத் தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ"
என்று பாடியவர் யார்?

  • பாரதி
  • பாரதிதாசன்
  • தாராபாரதி
  • சுரதா
Ans:- C
23.

கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு .

Tnpsc General Tamil Online Notes - 020-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்

  • அனைத்தும் சரி
  • 1, 2 சரி
  • 2 , 3 சரி
  • 1 , 3 சரி
Ans:- A
24.

"தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
என்று பாடியவர் யார்?

  • பாரதி
  • பாரதிதாசன்
  • கடுவெளி சித்தர்
  • வள்ளலார்
Ans:- D
25.

"கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • இல்குலாப்
  • சுரதா
Ans:- C
26.

சரியான இணையை தேர்ந்தெடு
இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா

  • அனைத்தும் சரி
  • 1, 2 சரி
  • 2 , 3 சரி
  • 1 , 3 சரி
Ans:- A
27.

கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?

  • குயில்
  • அன்னம்
  • தென்றல்
  • தேச பக்தன்
Ans:- B
28.

நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?

  • பொதுமை வேட்டல்
  • முருகன் அல்லது அழகு
  • இளமை விருந்து
  • பெண்ணின் பெருமை
Ans:- C
29.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?

  • 1647
  • 1467
  • 1746
  • 1476
Ans:- B
30.

"ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்ற!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?

  • கண்ணதாசன்
  • வைரமுத்து
  • வாலி
  • சுரதா
Ans:- C
31.

விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
___இனம் 2. வண்ணம் _____
_____ குணம் 4. வனப்பு ____

  • மூன்று , நூறு , பத்து, எட்டு
  • எட்டு, நூறு, பத்து, மூன்று
  • பத்து, நூறு, எட்டு, மூன்று
  • நூறு , பத்து , எட்டு , மூன்று
Ans:- A
32.

தவறான இணையைத் தேர்ந்தெடு.

  • உருபன் – Morpheme
  • ஒளியன் – Phoneme
  • ஒப்பிலக்கணம் – Comparative Grammer
  • பேரகராதி – Lexicon
Ans:- B
33.

கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?

  • தமிழ்ஒளி
  • நாகலிங்கம்
  • கவிமணி
  • மா.அமரேசன்
Ans:- D
34.

பொருத்துக
உற்பத்திப் பொருள் (1 கிலோ) தண்ணீரின் அளவு (லிட்டர்)
ஆப்பிள் i) 822
சர்க்கரை ii) 1780
அரிசி iii) 2500
காப்பி கொட்டை iv) 18, 900

  • i ii iii iv
  • ii iii i iv
  • iv iii ii i
  • i iii ii iv
Ans:- A
35.

" ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
என்ற வரிகள் யாருடையது?

  • தமிழ்ஒளி
  • நாகலிங்கம்
  • கவிமணி
  • யூமா வாசுகி
Ans:- C
36.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்

  • குறிப்பறிதல்
  • ஒழுக்கமுடைமை
  • பண்புடைமை
  • அறிவுடைமை
Ans:- A
37.

"சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று "
இக்குறளில் பயின்று வரும் அணி

  • எடுத்துக்காட்டுவமை அணி
  • உவமையணி
  • பிறிது மொழிதல் அணி
  • ஏகதேச உருவக அணி
Ans:- B
38.

கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.
1.ஒடிசா 2. கேரளா 3. கர்நாடகம்
4.ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்

  • அனைத்தும்
  • 1, 2, 3
  • 2, 3, 4
  • 3, 4, 5
Ans:- C
39.

சரியான பொருளை தேர்ந்தெடு
துவனம், துகலம்

  • நுட்பமான ஒலி, ஒலி
  • ஒலி, நுட்பமான ஒலி
  • முழங்குதல், ஒலி
  • முழங்குதல், நுட்பமான ஒலி
Ans:- B
40.

கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

  • வியங்கோள் வினைமுற்று தொடர்
  • வினைத் தொகை
  • அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
  • அனைத்து எண்ணுப் பெயர்களுடன்
Ans:- C
41.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

  • தேசியத் திறனாய்வுத் தேர்வு
  • ஊரகத் திறனாய்வுத் தேர்வு
  • தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
  • மூன்றும் சரி
Ans:- B
42.

பொருத்தமான விடையைத் தேர்க
சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்

  • i ii iii iv
  • iii iv i ii
  • iv iii ii i
  • iii ii i iv
Ans:- B
43.

வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?

  • உம்
  • மட்டும்
  • தான்
Ans:- B
44.

சரியான இணையை தேர்ந்தெடு .
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .

  • அனைத்தும் சரி
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • இரண்டும் தவறு
Ans:- B
45.

ஓங்கிய‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

  • சந்தி
  • சாரியை
  • உடம்படுமெய்
  • இறந்தகால இடைநிலை
Ans:- C
46.

பிழையை நீக்கி எழுதுக
" தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "

  • தென்னையிலிருந்து நார் எடுத்தார்
  • தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார்
  • தென்னையிலிருந்து நார் உரித்தார்.
  • தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் .
Ans:- B
47.

கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?

  • ' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் .
  • ‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
  • 'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் .
  • வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும்
Ans:- D
48.

ஜப்பானியர்கள் ஐ.என் .ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை , இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?

  • கேரளா , தமிழ்நாடு
  • ஆந்திரா , தமிழ்நாடு
  • கேரளா, குஜராத்
  • குஜராத் , தமிழ்நாடு
Ans:- C
49.

. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?

  • தில்லான்
  • பாரதியார்
  • நேதாஜி
  • முத்துராமலிங்கனார்
Ans:- A
50.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க

  • கா+ க்+க்+அ
  • கா+க் + அ
  • கா+ அ + க்+அ
  • கா+க்+க
Ans:- D
51.

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?

  • வைரமுத்து
  • கல்கி
  • வல்லிக்கண்ணன்
  • நா. முத்துக்குமார்
Ans:- C
52.

தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • வைரமுத்து
  • முடியரசன்
Ans:- A
53.

பிரித்து எழுதுக : வீடினதன்றறன்

  • வீடின + தன்று + அறன்
  • வீடின + தன்றறன்
  • வீடினது + அன்று + அறன்
  • வீடினதன்று + அறன்
Ans:- C
54.
Tnpsc General Tamil Online Notes - 020-1

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

  • அவன்
  • எவன்
  • இவன்
  • உவன்
Ans:- B
55.

மரபு பிழைகளை நீக்குக

  • எருது எக்காளமிடும்
  • எருது கத்தும்
  • எருது பிளிறும்
  • எருது அலறும்
Ans:- A
56.

பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க .

  • தோழிக்கு சம்பிரதாயப்படி மேரேஜ் நடந்தது
  • தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
  • தோழிக்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது
  • தோழிக்கு மரபுப்படி மேரேஜ் நடந்தது
Ans:- B
57.

சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:

  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டு செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டு செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
  • மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுச் செல்லும்
Ans:- C
58.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எரி எறி

  • மீ மாசு
  • ஈ காசு
  • தீ வீசு
  • வீ ஏசு
Ans:- C
59.

மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க

  • மிக
  • மிகல்
  • மிகு
  • மிகுதி
Ans:- C
60.

வெள’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

  • பல்லு
  • கைப்பற்றுதல்
  • மீட்டல்
  • பள்ளு
Ans:- B
61.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

  • கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
  • கற்கண்டு, கஞ்சி, கக்குவான், கக்குதல்
  • கஞ்சி, கற்கண்டு, கக்குதல், கக்குவான்
  • கக்குதல், கற்கண்டு, கக்குவான், கஞ்சி
Ans:- A
62.

கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

  • செய்தி வாக்கியம்
  • தனி வாக்கியம்
  • கலவை வாக்கியம்
  • தொடர் வாக்கியம்
Ans:- B
63.

செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக

  • அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளை விண்ணில் ஏவினர்
  • அறிஞர்கள் அறிவியல் செயற்கைகோளை ஏவினர் விண்ணில்
  • செயற்கைகோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது
  • விண்ணில் அறிவியல் அறிஞர்கள் ஏவினர் செயற்கைகோளை
Ans:- A
64.

'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க

  • பயன்பெறுதல்
  • மகிழ்ந்திருத்தல்
  • பயனற்றுப்போதல்
  • வெறுத்திருத்தல்
Ans:- C
65.

‘மயங்கி மதுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?

  • பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  • கம்பர்
  • குமரகுருபரர்
  • ஒட்டக்கூத்தர்
Ans:- D
66.

மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

  • தமிழிலக்கிய வரலாறு
  • தமிழின்பம்
  • கள்ளர் சரித்திரம்
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு
Ans:- D
67.

திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் காலம்

  • 1823 – 1882
  • 1832 – 1874
  • 1823 – 1874
  • 1824 – 1873
Ans:- C
68.

ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் தவறானது எது?
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை
அரசு ஆவணக் காப்பகம் – சென்னை
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி
சரஸ்வதி மகால் – தஞ்சாவூர்

  • அனைத்தும் சரி
  • 1, 2, 3 சரி
  • 1, 2, 4 சரி
  • 1 , 3, 4 சரி
Ans:- C
69.

நேரு தம் மகள் இந்திராவுக்கு _____ ஆண்டு முதல் _____ ஆண்டு வரை கடிதங்கள் இயற்றினார்.

  • 1920 - 1960
  • 1922 – 1962
  • 1920 – 1962
  • 1922 – 1964
Ans:- D
70.

நடுவண் அரசு முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு

  • 1964
  • 1996
  • 1997
  • 1995
Ans:- D
71.

"பண்ணினை இயற்கை வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி"
என்னும் பாடல் பொதுமை வேட்டல் நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது

  • தெய்வ நிச்சயம்
  • போற்றி
  • வாழ்த்து
  • பொதுமை
Ans:- B
72.

தவறான இணையைத் தேர்ந்தெடு

  • பயக்கும் - பெறுதல்
  • அன்ன - அவை போல்வன
  • அமையும் – உண்டாகும்
  • அகம் – உள்ளம்
Ans:- A
73.

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்”
என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

  • தொல்காப்பியம்
  • பரிபாடல்
  • சிலப்பதிகாரம்
  • தண்டியலங்காரம்
Ans:- D
74.

மோசிகீரனார் பாடிய பாடல்கள் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம்பெறவில்லை?

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு
Ans:- D
75.

கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் ____ மரபில் பிறந்தார்

  • வேடன்
  • வேளாளர்
  • வெள்ளையர்
  • கொங்கு
Ans:- B
76.

வல்லினம் மிகும் இடங்களில் தவறான கூற்று எது

  • பாடக் கேட்டேன்
  • பேச செய்தார்
  • தேடித் திரிந்தான்
  • தழுவிக் கொண்டான்
Ans:- B
77.

தூயவர் செயல்களாக திரிகடுகம் கூறுவனவற்றுள் தவறானது எது?

  • நீராடிய பின் உண்ணுதல்
  • பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல்
  • சான்றாண்மை குன்றாமை
  • எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மை
Ans:- D
78.

அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வரும் குறள் எத்தனையாவது குறள்?

  • 350
  • 530
  • 754
  • 574
Ans:- C
79.

'நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்' என்று பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சச்சிதானந்தன்
Ans:- D
80.

வள்ளைக் கொடிகள் மிகுந்த நாடு என நளவெண்பாவில் குறிப்பிடப்படும் நாடு

  • அவந்தி நாடு
  • அங்க நாடு
  • குரு நாடு
  • கலிங்க நாடு
Ans:- C
81.

இக்கால ஒளவையாரால் இயற்றப்பட்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் எத்தனை பாடல்களை கொண்டது

  • 407
  • 409
  • 507
  • 509
Ans:- B
82.

நெய்தல் திணையின் கூற்றில் எது தவறானது

  • நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் - பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
  • தொழில் - உப்பு விளைத்தல், சூறையாடி பெறப்படுகின்ற பொருள்
  • பூ – தாழம்பூ
Ans:- C
83.

"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” - என்று கூறும் நூல் எது

  • ஆத்திச்சூடி
  • மூதுரை
  • முதுமொழி
  • நால்வழி நாற்பது
Ans:- B
84.

வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?

  • எத்திராசலு
  • துரைராசு
  • பெருவாயின் முள்ளியார்
  • அந்தககவி வீரராகவர்
Ans:- C
85.

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பாடியவர் யார்

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சச்சிதானந்தன்
Ans:- A
86.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு

  • அதிர்ஷ்டம் - நற்பேறு
  • பூஜை – ஆராதனை
  • குமாஸ்தா – எழுத்தர்
  • தைரியம் – துணிவு
Ans:- B
87.

வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன

  • கண்ணதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • சுரதா
  • பிச்சமூர்த்தி
Ans:- C
88.

தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்

  • அப்பூதியடிகளார்
  • மாறநாயனார்
  • திருநீலகண்டர்
  • திருஞானசம்பந்தர்
Ans:- A
89.

பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் ______ ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்

  • 1890
  • 1894
  • 1897
  • 1898
Ans:- B
90.

எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர் யார்?

  • பெரியார்
  • கண்ணதாசன்
  • அண்ணா
  • வாலி
Ans:- C
91.

‘ஒத்த தரிவானுயிர் வாழ்வான்; மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்’ என்ற குறள் கீழ்க்கண்ட எந்த பொருளை உணர்த்துகிறது

  • ஒப்புரவாளனது செல்வம் பயன்படுத் தன்மை
  • ஒப்புரவின் சிறப்புக் கூறப்பட்டது
  • ஒப்புரவறியார் இழிவு
  • ஒப்புரவினாற் கெடுவது கேடன்று என்பது
Ans:- C
92.

தவறான இணையைத் தேர்ந்தெடு

  • உலகு – இடவாகுபெயர்
  • பெறல் – தொழிற்பெயர்
  • மற்றையான் - குறிப்பு வினைமுற்று
  • ஊருணி – காரணப்பெயர்
Ans:- C
93.

'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ‘ என்று கூறியவர் யார்?

  • கவிமணி
  • பரணர்
  • கபிலர்
  • மாங்குடி மருதனார்
Ans:- B
94.

‘தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
  • நெடுநல்வாடை
  • மணிமேகலை
Ans:- C
95.

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்’ என்பதும் "நான்" என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்கின்றன" என்றவர்

  • எர்னஸ்ட் காசிரர்
  • எர்னஸ்ட் காசிரர் இந்திரன்
  • வால்ட் விட்மன்
  • பாப்லோ நெருடா
Ans:- A
96.

பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை

  • 6
  • 8
  • 7
  • 9
Ans:- C
97.

சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது?

  • அகவற்பா
  • நூற்பா
  • சிந்துப்பா
  • ஆசிரியப்பா
Ans:- B
98.

மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்

  • க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ
  • க, ங, ச, ஞ, ட, த, ந, ப, ம, வ
  • க, ங, ச, ட, த, ந, ப, ம, ய, வ
  • க, ங, ச, ட, த, ந, ப, ம, ர, ல
Ans:- A
99.

வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _____ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

  • புனல் விழா
  • இந்திர விழா
  • பொங்கல்
  • மகர விழா
Ans:- B
100.

‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

  • புதுமைப்பித்தன்
  • சுஜாதா
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
Ans:- C
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 027
Tnpsc General Tamil Online Notes - 027 Tnpsc General Tamil Online Notes - 027 TNPSC General Tamil On…
Tnpsc General Tamil Online Notes - 010
Tnpsc General Tamil Online Notes - 010 Tnpsc General Tamil Online Notes - 010 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 014
Tnpsc General Tamil Online Notes - 014 Tnpsc General Tamil Online Notes - 014 TNPSC General Tamil Onl…
Tnpsc General Tamil Online Notes - 016
Tnpsc General Tamil Online Notes - 016 Tnpsc General Tamil Online Notes - 016 TNPSC General Tamil Online…
Post a Comment
Search
Menu
Theme
Share