17

Tnpsc General Tamil Online Notes - 012

"TNPSC General Tamil Online Notes - 12 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 20 min read
Tnpsc General Tamil Online Notes - 012

Tnpsc General Tamil Online Notes - 012

TNPSC General Tamil Online Notes - 12 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
தலைமைஉன்னைத் தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்
நீஅதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
நீ தேட வேண்டுவதுதொண்டு
தொண்டுக்கு முந்து, தலைமைக்குப்பிந்து
என்பது உன் நெறியாக இருக்கட்டும்

  • நேரு எழுதிய கடிதவரிகள்
  • மு.வ. எழுதிய கடிதவரிகள்
  • அண்ணா எழுதிய கடிதவரிகள்
  • காந்தி எழுதிய கடிதவரிகள்
Ans:- B
2.

பிழையற்றத்தொடரைத் தேர்வு செய்க.

  • ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
  • ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
  • ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
  • ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Ans:- B
3.

பொருத்துக:
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு 3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்

  • 2 1 4 3
  • 2 3 4 1
  • 3 2 1 4
  • 3 1 4 2
Ans:- A
4.

எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். - எனப் பாடியவர்.

  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • சுரதா
  • கண்ணதாசன்
Ans:- A
5.

மரக்கலத்தை குறிக்கும்நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

  • கலம், தோணி, புணரி, மிதவை
  • கலம், பரிசில், ஓடம், பரவை
  • கலம், வங்கம், புணை, அம்பி
  • கலம், பரிசில், ஆழி, பஃறி
Ans:- C
6.

அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

  • காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
  • காசு, கிளி, கூறை,கேணி, கைப்பிடி
  • கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
  • கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
Ans:- B
7.

" எதிரூன்றல் காஞ்சி,எயில் காத்தல் நொச்சி” – இதில் நொச்சி என்பது

  • மதில் காத்தல்
  • மதில் வளைத்தல்
  • மதில் பூச்சூடல்
  • மதில் வாகை சூடல்
Ans:- A
8.

பொருத்துக
(a) திருவரங்கம் 1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்
(C) திருமறைக்காடு 3. மீனாட்சி
(D) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம்

  • 1 3 4 2
  • 2 1 4 3
  • 3 2 4 1
  • 1 4 2 3
Ans:- B
9.

குலசேகரஆழ்வார் இயற்றிய நூல் எது?

  • நந்திக் கலம்பகம்
  • நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
  • கலித்தொகை
  • நற்றிணை
Ans:- B
10.

திருஞானசம்பந்தருக்குதொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.

  • உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப் பாலை உண்டார்
  • 220 தலங்கள் வழிப்பட்டார்.
  • திராவிட சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
  • அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்
Ans:- D
11.

துறந்தார் பெருமைதுணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை

  • இணை மோனை
  • பொழிப்பு மோனை
  • ஒரூஉ மோனை
  • கூழை மோனை
Ans:- B
12.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் - இதில் அமைந்து வரும் தொடை நயம்

  • அடி முரண் தொடை
  • அடிமோனைத் தொடை
  • அடி இயைபுத் தொடை
  • எதுவுமில்லை
Ans:- A
13.

'அரியவற்றுள்’ –இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.

  • நிரை நேர் நேர்
  • நிரை நிரை நேர்
  • நிரை நேர் நிரை
  • நேர் நேர் நிரை
Ans:- B
14.

உவமை விளக்கும் பொருளைகண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்

  • 3 1 4 2
  • 2 3 4 1
  • 4 1 2 3
  • 4 2 1 3
Ans:- C
15.

26முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்

  • மடந்தை
  • அரிவை
  • மங்கை
  • தெரிவை
Ans:- D
16.

கரந்தை தமிழச்சங்கத்தில்நமச்சிவாய முதலியார் தலைமையில் தங்கத்தோடா பரிசினைப் பெற்றவர் யார்?

  • நாமக்கல் கவிஞர்
  • அப்துல் ரகுமான்
  • வாணிதாசன்
  • வரத நஞ்சப்ப பிள்ளை
Ans:- D
17.

சேக்கிழார் எந்தநூலை முதல் நூலாகக் கொண்டு திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார்

  • திருத்தொண்டர் மாக்கதை
  • திருத்தொண்டர் தொகை
  • நாயன்மார்கள் வரலாறு
  • இறை வரலாறு
Ans:- B
18.

தித்திக்கும்தமிழிலே முத்து முத்தாய் பாடல் செய்தவர் என சுரதா யாரை கூறுகிறார்

  • திருவள்ளுவர்
  • கம்பர்
  • இளங்கோவடிகள்
  • கபிலர்
Ans:- A
19.

பாதம்பூ என்பதே பாம்பு எனத் திரிந்தது என கூறியவர் யார்?

  • புரட்சி கவிஞர்
  • கவிக்கோ
  • உவமைக் கவிஞர்
  • பாவலர் மணி
Ans:- C
20.

விரல் நுனிவெளிச்சங்கள், பூமியைதிறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம் போன்ற நூலை எழுதியவர் யார்?

  • முடியரசன்
  • வாணிதாசன்
  • தாராபாரதி
  • அப்துல்ரகுமான்
Ans:- C
21.

எந்த மன்னனின்விருப்பத்திற்கேற்ப நன்னூல் புத்தமித்திரரால் எழுதப்பட்டது

  • முதலாம் இராஜேந்திரன்
  • வீர குலோத்துங்க சோழன்
  • வீர ராஜேந்திர சோழன்
  • முதலாம் குலோத்துங்கன்
Ans:- C
22.

"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னிற கற்றோன் சிறப்புடையன்" என்று பாடியவர் யார்?

  • வள்ளுவர்
  • கம்பர்
  • ஒளவையார்
  • பட்டினத்துப் பிள்ளையார்
Ans:- C
23.

பொருந்தாதது எது?

  • பிணை – பெண்மான்
  • எழினி - உறை
  • கொல்லை -மருத நிலம்
  • மொய்ம்பு – வலிமை
Ans:- C
24.

எட்டுத்தொகைநூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • குறுந்தொகை
  • பரிபாடல்
Ans:- D
25.

காட்சிகால்கோள் நீரப்படைநடுகல் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

  • தொல்காப்பியம்
  • அகநானூறு
  • புறநானூறு
  • கம்பராமாயணம்
Ans:- A
26.

பொருந்தாதது எது?

  • உரம் – மார்பு
  • மிடறு - கழுத்து
  • வெஃகல் – சினத்தல்
  • குறளை – புறம்பேசுதல்
Ans:- C
27.

கீழ்க்கண்டவற்றுள் தவறானதுஎது?

  • தறியில் கட்டப்பட்ட யானை அசைவது போல் நாவாய்கள் அசைந்தன - பட்டினப்பாலை
  • மார்க்கோபோலோ - வெனிசு நாட்டறிஞர்
  • மருதநில அரசனது கோட்டை கப்பலுக்கு உவமையாகக் கூறுவது - மதுரைக்காஞ்சி
  • மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் – பாரதி
Ans:- C
28.

கீழ்க்கண்டவற்றுள் தவறானதுஎது?

  • ப், ம் - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த தோன்றும்
  • ர், ழ் – மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கின்றன
  • ய் - மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்துதலால் பிறக்கின்றன
  • ள்-மேல்வாயை நாவினது ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கின்றன.
Ans:- C
29.

ஆசிரியப்பாவின் பொதுஇலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது

  • இணைக்குறள் ஆசிரியப்பா
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • நேரிசை ஆசிரியப்பா
  • அடிமறி மண்டல ஆசிரியப்பா
Ans:- B
30.

சமூகத்தின்மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது " என்று கூறியவர்

  • பெரியார்
  • காந்தி
  • அம்பேத்கர்
  • அண்ணா
Ans:- C
31.

அரபுஎண்களைக் கூறுக – கஎஅ

  • 176
  • 187
  • 178
  • 189
Ans:- A
32.

பொருத்துக
(a) அமுதம் 1. இனிமை
(b) மதுரம் 2. உலகம்
(c) சலதி 3. குளிர்ச்சி

Tnpsc General Tamil Online Notes - 012-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


(d) புவனம் 4. கடல்

  • 3 4 2 1
  • 1 2 3 4
  • 2 3 1 4
  • 3 1 2 4
Ans:- D
33.

ஏன்?என்ன? எப்போது? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறு பேர்கள் அறியச் செய்வார் செய்தியினை என்று குறிப்பிடுபவர் யார்?

  • கெப்ளர்
  • கிப்ளிங்
  • பிளாட்டோ
  • ஐன்ஸ்டீன்
Ans:- B
34.

மதுரையில்நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியவர் யார்?

  • பாவாணர்
  • பரிதிமாற் கலைஞர்
  • உ.வே.சா
  • மறைமலையடிகள்
Ans:- A
35.

தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்று கூறியவர் யார்?

  • பெரியார்
  • அம்பேத்கர்
  • மு.வ
  • அண்ணா
Ans:- A
36.

பஞ்சமர்பள்ளிகளை எந்த சபையின் உதவியுடன் அயோத்திதாசப் பண்டிதர் நிறுவினார்

  • பிரம்மசமாஜம்
  • ஆரிய சமாஜம்
  • பிரம்மஞானசபை
  • சத்திய ஞான சபை
Ans:- C
37.

வள்ளலார்திருவொற்றியூர் சிவபெருமான் மீது பாடிய நூல் எது?

  • வடிவுடை மாணிக்க மாலை
  • எழுத்தறியும் பெருமான் மாலை
  • தெய்வமணி மாலை
  • திருவருட்பா
Ans:- B
38.

ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுகோளுக்கு இணங்க தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர் யார்?

  • காளமேகப் புலவர்
  • வீரராகவர்
  • சந்திரசேகர கவிராச பண்டிதர்
  • குமரகுருபரர்
Ans:- C
39.

கியூரியின்மகள் ஐரினும் ஜோலியட் கியூரியும் செயற்கை கதிர்வீச்சு ஆராய்ச்சிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?

  • 1935
  • 1934
  • 1932
  • 1930
Ans:- A
40.

பெரியாருக்குUNESCO விருது எந்தாண்டு வழங்கப்பட்டது

  • 1980
  • 1970
  • 1960
  • 1950
Ans:- B
41.

கன்னிக்குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும் மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம் கேட்கும் " என்று பாடியவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • சுரதா
  • தாராபாரதி
Ans:- D
42.

பொருத்துக
(a) இலக்கிய மாநாடு 1. பாரதியார்
(b) தமிழ்நாட்டுக் கவிஞர் 2. சென்னை
(c) குற்றாலம் 3. ஜி.யு.போப்
(d) தமிழ்க் கையேடு 4. அருவி

  • 3 1 4 2
  • 2 3 4 1
  • 2 1 4 3
  • 4 2 1 3
Ans:- C
43.

மணிமேகலாதெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு எது?

  • இலங்கைத்தீவு
  • இலட்சத்தீவு
  • மணிபல்லவத் தீவு
  • மாலத்தீவு
Ans:- C
44.

உப பாண்டவம், கதாவிலாசம்,தேசாந்திரி, கால்முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர் யார்?

  • எஸ்.ராமகிருஷ்ணன்
  • புவியரசு
  • தாராபாரதி
  • கவிமணி
Ans:- A
45.

இனிமை+ உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  • இன்உயிர்
  • இனியஉயிர்
  • இன்னுயிர்
  • இனிமைஉயிர்
Ans:- C
46.

குழந்தைகளைத்தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது." என்று கூறியவர் யார்?

  • நேரு
  • காந்தி
  • கைலாஷ் சத்யார்த்தி
  • அன்னை தெரசா
Ans:- C
47.

மருந்து'என்னும் சொல் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?

  • தொல்காப்பியம்
  • அகநானூறு
  • பதிற்றுப்பத்து
  • குறுந்தொகை
Ans:- B
48.

"எட்டுத்திக்கும் புகழ வேண்டும், எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்" என்ற வரிகள் யாருடையது?

  • தாராபாரதி
  • பெருஞ்சித்திரனார்
  • அறிவுமதி
  • பாரதிதாசன்
Ans:- C
49.

தவறானஇணையைத் தேர்ந்தெடு.

  • நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – தொல்காப்பியம்
  • கடல் நீர்முகந்த கமஞ்சூழ் எழிலி .. -கார்நாற்பது
  • நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு - பதிற்றுப்பத்து
  • கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் – குறுந்தொகை
Ans:- D
50.

பொருத்தான சொற்களைக் கொண்டு நிரப்புக. இனிய ____இன்னாத கூறல் கனியிருப்பக் ____கவர்ந் தற்று.

  • எல்லாம், காய்
  • உளவாக, என்பும்
  • அன்பு, காய்
  • உளவாக, காய்
Ans:- D
51.

கீழ்க்கண்ட கூற்றுகளைஆராய்க.
தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தனவ என கூறியவர் வில்லியம் ஜோன்ஸ்
வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வட மொழி என்று கூறியவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
மால்தோ, தோடா, கோண்டி முதலியவற்றையும் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் முதலியவற்றையும் இணைத்து தமிழியன் எDன பெயரிட்டவர் ஹோக்கன்.

  • அனைத்தும் சரி
  • 3, 4 சரி
  • 4 மட்டும் சரி
  • அனைத்தும் தவறு
Ans:- B
52.

தமிழிசைஇயக்கத்தின்தந்தைஎன்றுபோற்றப்படுபவர்

  • ஆபிரகாம் லிங்கன்
  • ஆறுமுக நாவலர்
  • ஆபிரகாம் பண்டிதர்
  • உ.வே.சா
Ans:- C
53.

தொ.பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
குளித்தல்என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
குளிர்த்தல்என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
குள்ளக்குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
நீரும்நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக
விளங்குகின்றன என்று கூறினார்.

  • 2 மட்டும் சரி
  • 2 , 4 சரி
  • 1, 2, 4 சரி
  • அனைத்தும் சரி
Ans:- B
54.

இலக்கணக்குறிப்புத் தருக .
கருங்குவளை , செந்நெல்

  • வினைத்தொகைகள்
  • பண்புத்தொகைகள்
  • 2 ம் வேற்றுமைத் தொகைகள்
  • 7 ம் வேற்றுமைத் தொகைகள்
Ans:- B
55.

கம்பராமாயணத்தில்கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது

  • அயோத்யாகா காண்டம் - நகரப் படலம்
  • அயோத்யாகா காண்டம் - குகப் படலம்
  • பாலகாண்டம் – குகப்படலம்
  • பாலகாண்டம் – நகரப்படலம்
Ans:- D
56.

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
IRCTCஇணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை
நீக்கம் செய்யவும் வசதி உள்ளது .

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


இந்தவசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
12ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
தற்போது இதில் ஒரு மணி நேரத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யலாம்

  • 2 , 3 சரியல்ல
  • 2,4 சரியல்ல
  • 3, 4 சரியல்ல
  • 2, 3, 4 சரியல்ல
Ans:- C
57.

விடை வரிசையைத் தேர்க.
இதுசெயற்கைக்கோள்ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்
. இதுகடல் பயணத்துக்காகஉருவாக்கப்பட்ட செயலி .

  • நேவிக், சித்தாரா
  • நேவிக் , வானூர்தி
  • வானூர்தி , சித்தாரா
  • சித்தாரா , நேவிக்
Ans:- D
58.

முதல்பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில் தொடங்கியவர்கள் யார் ?

  • ஜோதிராவ் பூலே , சாவித்திரிபாய் பூலே
  • முத்துலெட்சுமி , பண்டித ரமாபாய்
  • பெரியார் , பண்டித ரமாபாய்
  • இராமாமிர்தம் , பண்டித ரமாபாய்
Ans:- A
59.

வாழ்க்கையில்அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்கு தரப்பட வேண்டும் " என்று கூறியவர் யார் ?

  • பெரியார்
  • காமராஜர்
  • அண்ணா
  • கதே
Ans:- C
60.

கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க.
கொற்கையிலிருந்தவெற்றிவேற் செழியன்- அடி 127
மாலைத் திங்கள் வழியோன்ஏறினன்- அடி 134
மன்பதைகாக்கும்முறைமுதல் கட்டிலின் - அடி 138

  • 1 மட்டும் சரி
  • 2 , 3 சரி
  • அனைத்தும் சரி
  • அனைத்தும் தவறு
Ans:- A
61.

பத்துப்பாட்டுஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார் ?

  • இராசவேல்
  • இராசமாணிக்கனார்
  • இராசேந்திரன்
  • அரவிந்த் குப்தா
Ans:- B
62.

2 ம்பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்

  • நார்த்தாமலை – புதுக்கோட்டை
  • சீனிவாசநல்லூர் – திருச்சி
  • கொடும்பாளூர் – புதுக்கோட்டை
  • திருவரங்கம் – திருச்சி
Ans:- C
63.

சரியான பொருளைத் தேர்ந்தெடு பொலம் , பொலி

  • காடு , அழகு
  • அழகு, அழகு
  • அழகு , தானியக்குவியல்
  • காடு , தானியக்குவியல்
Ans:- C
64.
Tnpsc General Tamil Online Notes - 012-1

இலக்கணக் குறிப்புத் தருக– இறைஞ்சி

  • பெயரெச்சம்
  • வியங்கோள் வினைமுற்று
  • வினையெச்சம்
  • வினைத்தொகை
Ans:- C
65.

அடிசில்வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம் கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம் “ இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளன ?

  • குணமாலையார் இலம்பகம்
  • கோவிந்தையார் இலம்பகம்
  • காந்தருவதத்தையார் இலம்பகம்
  • நாமகள் இலம்பகம்
Ans:- D
66.

கற்பிக்கப்படும்கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோஅலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்" என்று கூறியவர் யார்?

  • அம்பேத்கர்
  • பெரியார்
  • பாரதியார்
  • வள்ளலார்
Ans:- B
67.

கீழ்க்கண்டவற்றுள்எது சரியானது?
நிரை நிரை-கருவிளம்
நிரை நேர்– கூவிளம்

  • அனைத்தும்
  • 1 மட்டும் சரி
  • 2 மட்டும் சரி
  • எதுவுமில்லை
Ans:- B
68.

உலகத் தமிழ் மாநாடுகள் குறித்தஇணைகளில் எது தவறானது?

  • 1995 – தஞ்சாவூர்
  • 1966 – கோலாலம்பூர்
  • 1968 – சென்னை
  • 1987 – மொரீசியசு
Ans:- D
69.

பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் " இவ்வரிகள் யாருடையது?

  • அமுதோன்
  • நா.முத்துக்குமார்
  • கவிஞர் பாஷோ
  • கல்யாண்ஜி
Ans:- B
70.

சரியான பொருளை தேர்ந்தெடு .
பரல், அண்டயோனி

  • பாறை, உலகம்
  • மேகம் , உலகம்
  • கல் , ஞாயிறு
  • பாறை, ஞாயிறு
Ans:- C
71.

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – முளைத்த

  • முளைத்து + அ
  • முளை + த் + அ
  • முளை +த் + த் + அ
  • முளைத்து + த் + அ
Ans:- C
72.

எவ்வினையோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம் " இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

  • ஐங்குறுநூறு
  • அகநானூறு
  • மனோன்மணீயம்
  • ஒவ்வொரு புல்லையும்
Ans:- C
73.

''ஆதிகபிலர்சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" என்று பாடியவர் யார்?

  • திருமூலர்
  • சிவவாக்கியர்
  • பாம்பாட்டிச் சித்தர்
  • பத்திரகிரியார்
Ans:- D
74.

காஞ்சனை என்பது எவ்வகையான நூல்?

  • கவிதை தொகுப்பு
  • கட்டுரை தொகுப்பு
  • சிறுகதை தொகுப்பு
  • நாடக தொகுப்பு
Ans:- C
75.

சரியானஇடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக. " மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் "

  • மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார்
  • மறைமலையடிகள் மரணத்தின்பின் , ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார்
  • மறைமலையடிகள், ' மரணத்தின்பின் மனிதர் நிலை ‘ என்னும் நூலை இயற்றினார்
  • மறைமலையடிகள் மரணத்தின்பின், மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார்
Ans:- C
76.

ப.ஜீவானந்தம்அவர்கள் மறைந்த ஆண்டு

  • 1962 ஜனவரி 18
  • 1962 ஜனவரி 19
  • 1963 ஜனவரி 18
  • 1963 ஜனவரி 19
Ans:- C
77.

Love poems from a classical Tamil anthology” என்னும்சங்கஇலக்கியமொழிபெயர்ப்பைவெளியிட்டவர்யார்?

  • ம.லெ.தங்கப்பா
  • ஏ.கே.ராமானுஜம்
  • ஆல்பர்காம்யு
  • பிரம்மராஜன்
Ans:- B
78.

''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் " - இப்பாடல் அமைந்துள்ள திணை

  • கைக்கிளை
  • பெருந்திணை
  • பாடாண் திணை
  • வெட்சித் திணை
Ans:- C
79.

என் தமக்கையின்மடியில் அயர்ந்து போனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு” - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை

  • ஆத்மாநாம் கவிதைகள்
  • புளியமரம்
  • மதுசூதனன் கவிதைகள்
  • கேள்வி
Ans:- A
80.

திரிகூடராசப்பக்கவிராயர் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?

  • இவர் திருநெல்வேலியில் பிறந்தவர்
  • குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் வைணவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்
  • திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர்.
  • குற்றாலத்தின் மீது தலப்புராணம், மாலை,சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருக்கின்றார்.
Ans:- B
81.

கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்

  • அப்பர், திருமங்கையாழ்வார்
  • மாணிக்கவாசகர் , பேயாழ்வார்
  • மாணிக்கவாசகர் , திருமங்கையாழ்வார்
  • அப்பர், பேயாழ்வார்
Ans:- C
82.

இளையராஜா உருவாக்கியகர்நாடக செவ்வியல் ராகம் எது?

  • பஞ்சாட்சரம்
  • பஞ்சமம்
  • பஞ்சலோகம்
  • பஞ்சமுகி
Ans:- D
83.

நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .

  • EPHERIDES
  • EPHEMERS
  • EPHEMERIDES
  • EPHEDIARY
Ans:- C
84.

ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்

  • 06.09.1736 - 06.01.1761
  • 06.09.1736 - 06.09.1763
  • 06.09.1736 – 11.01.1761
  • 06.01.1736 - 11. 09. 1763
Ans:- C
85.

“பெருங்கடல்முகந்த இருங் கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,
போர்ப்பு உறு முரசின் இரங்கி "
-இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • அகநானூறு
  • புறநானூறு
  • ஐங்குறுநூறு
  • குறுந்தொகை
Ans:- A
86.

"இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்”
இக்குறளில் பயின்று வரும் அணி

  • உருவக அணி
  • பிறிது மொழிதல் அணி
  • வேற்றுமை அணி
  • உவமை அணி
Ans:- A
87.

"மனிதனின் பேச்சுத்திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு

  • 1861
  • 1881
  • 1886
  • 1868
Ans:- A
88.

கீழ்க்கண்டக்கூற்றுகளை ஆராய்க
நிலைமொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும் போது ‘ உயிர் வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும்' என்னும் விதியைப் பெறும்.
நிலைமொழியின்ஈற்றில்இஈஐவரும்போதுவகரஉடம்படுமெய் பெறும்
பண்புப்பெயர்புணர்ச்சியில் 'ஈறுபோதல்’ என்னும்விதியே முதன்மையானதாக விளங்கும்
தன்னொற்றிரட்டல்என்னும்விதிபண்புப்பெயர்ப்புணர்ச்சிக்குப் பொருந்தும்

  • 1, 2, 3 சரி 4 தவறு
  • 1, 3, 4 சரி 2 தவறு
  • 1, 2 சரி 3, 4 தவறு
  • 1,2, 4 சரி 3 தவறு
Ans:- B
89.

பெ.நா. அப்புசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக் கழகம் வழங்கியபட்டம்

  • தமிழ்ச் செம்மல்
  • பேரவை புலவர்
  • தமிழ் பேரவைச் செம்மல்
  • புலவர்
Ans:- C
90.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு _____ தோன்றும் எனக் கூறுகிறது

  • நகை
  • செல்வம்
  • வியப்பு
  • பெருமிதம்
Ans:- D
91.

சென்னைப்பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

  • 1826
  • 1835
  • 1854
  • 1857
Ans:- D
92.

சரியான பொருளைத் தேர்ந்தெடு. பிரசம், மதுகை

  • தேன், பெருமிதம்
  • பெருமிதம், தேன்
  • இனிப்பு, கடுஞ்சொல்
  • கடுஞ்சொல், இனிப்பு
Ans:- A
93.

ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
- இப்பாடல் யாரால் யாருக்காகப் பாடப்பட்டது.

  • ஒளவையாரால் பாரிக்கு
  • ஒளவையாரால் அதியமானுக்கு
  • கபிலரால் பாரிக்கு
  • கபிலரால் அதியமானுக்கு
Ans:- B
94.

மைக்ரோவாட் என்பது ஒரு வாட் சக்தியில் எத்தனை பாகம்

  • பத்து இலட்சத்தில் 2 பாகம்
  • பத்து இலட்சத்தில் 1 பாகம்
  • பத்து இலட்சத்தில் 10 பாகம்
  • பத்து இலட்சத்தில் 100 பாகம்
Ans:- B
95.

குளுக்கோஸ் தாங்கும்திறனறி சோதனையின் முடிவில் நீரிழிவுக்குறைபாட்டின் தாக்கம் எவ்வளவு எனக் கண்டறியப்பட்டது

  • 6.3%
  • 3.7%
  • 7.3 %
  • 3.6%
Ans:- C
96.

இலக்கணக்குறிப்பு தருக . தாவி, மாதே

  • வினையெச்சம், பெயரெச்சம்
  • பெயரெச்சம், வினையெச்சம்
  • பெயரெச்சம், விளி
  • வினையெச்சம், விளி
Ans:- D
97.

இலக்கணவகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகுபதத்திற்கு உரியவை எது /எவை? 1 . பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்

  • 1,3
  • 1, 2
  • 1 , 2, 3
  • 3, 4
Ans:- B
98.

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – அறிஞர்

  • அறி+ஞர்
  • அறிஞ+ அர்
  • அறி+ஞ்+ அர்
  • அறி+ஞ+அர்
Ans:- C
99.

யானை டாக்டர் “ என்ற குரும் புதினத்தை எழுதியவர்

  • அழகிய பெரியவன்
  • பெரியவன் கவிராயர்
  • ஜெயமோகன்
  • மல்லார்மே
Ans:- C
100.

கீழ்க்கண்ட மணிமேகலை குறித்த கூற்றுகளுள் எது தவறானது

  • இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
  • பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம்
  • சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது
  • கதைஅடிப்படையில் சிலப்பதிகாரத்தை மணிமேகலையின் தொடர்ச்சி என கூறுவர்
Ans:- D
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 022
Tnpsc General Tamil Online Notes - 022 Tnpsc General Tamil Online Notes - 022 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 008
Tnpsc General Tamil Online Notes - 008 Tnpsc General Tamil Online Notes - 008 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 006
Tnpsc General Tamil Online Notes - 006 Tnpsc General Tamil Online Notes - 006 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Post a Comment
Search
Menu
Theme
Share