Tnpsc General Tamil Online Notes - 024
"TNPSC General Tamil Online Notes - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 024
TNPSC General Tamil Online Notes - 24 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை யாருடைய பெயரில் வழங்கிவருகிறது?
- அஞ்சலையம்மாள்
- முத்துலட்சுமி ரெட்டி
- மூவலூர் இராமாமிர்தம்
- அம்புஜத்தம்மாள்
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராடியபோது மலாலாவின் வயது?
- 13
- 12
- 14
- 15
எந்தக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்புக்கு வகை செய்கிறது?
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
- ஈ.வே.ரா - நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம்
- மணியம்மையார் கல்வி உதவித்திட்டம்
- முத்துலட்சுமி ரெட்டி கல்வி உதவித்தொகை
முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலினை இயற்றியவர்?
- நீலாம்பிகை அம்மையார்
- முத்துலட்சுமி ரெட்டி
- சாவித்திரிபாய்பூலே
- ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்
வில்வாள் - இலக்கணக்குறிப்பு தருக
- உவமைத்தொகை
- உருவகம்
- உம்மைத்தொகை
- வேற்றுமைத்தொகை
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக்காட்டும் நூல்?
- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- குடும்பவிளக்கு
- இருண்டவீடு
"விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு" என்று கூறும் நூல் எது?
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
- திரிகடுகம்
- பழமொழி நானூறு
விதையாமை - இலக்கணக்குறிப்பு தருக
- எதிர்மறை தொழிற்பெயர்
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வினைமுற்று
- வினையெச்சம்
" நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்." என்று கூறியவர்?
- நேரு
- பெரியார்
- அறிஞர் அண்ணா
- பாரதிதாசன்
அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்?
- குடியரசு
- திராவிடநாடு
- விடுதலை
- புரட்சி
இந்தியமொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்குப் பாதுகாக்கப்படுகின்றன?
- கன்னிமரா நூலகம்
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- கொல்கத்தா தேசிய நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
தேசிய நூலக நாள் எது?
- ஆகஸ்ட் 9
- ஆகஸ்ட் 10
- ஆகஸ்ட் 11
- ஆகஸ்ட் 12
மொழிப்பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்வகை எது?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பழங்காலத்தில் திசை அறிய காந்த ஊசியைப் பயன்படுத்தினர் என்பதை அறிய உதவும் நூல்?
- பட்டினப்பாலை
- மணிமேகலை
- பதிற்றுப்பத்து
- புறநானூறு
பண்டைத்தமிழரின் கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை?
- மங்களூர்
- முசிறி
- முசிறி
- காவிரிப்பூம்பட்டினம்
"யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" என்ற அகநானூற்று வரிகள் எந்த துறைமுகத்தைப்பற்றிக் கூறுகிறது?
- கொற்கை
- முசிறி
- தொண்டி
- காவிரிப்பூம்பட்டினம்
பெருங்கற்காலத்தைச்சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
- ஆதிச்சநல்லூர்
- அரிக்கமேடு
- கொற்கை
- கோவை
நாட்டுப்புற அமைப்பிலிருந்து தோன்றிய பாவகை எது?
- பள்ளு
- வெண்பா
- குறவஞ்சி
- சிந்து
" வையை அன்ன வழக்குடை வாயில்" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
- பட்டினப்பாலை
- முல்லைப்பாட்டு
- அகநானூறு
- மதுரைக்காஞ்சி
இமிழிசை - இலக்கணக்குறிப்பு தருக.
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
நிலைஇய - இலக்கணக்குறிப்பு தருக.
- இன்னிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இசைநிறை அளபெடை
காஞ்சி என்பதன் பொருள்?
- நிலையாமை
- வளம்
- இனிமை
- தலைநகரம்
இரவில் செயல்படும் கடைவீதி எது?
- நாளங்காடி
- பல்லங்காடி
- அல்லங்காடி
- நல்லங்காடி
கிராமச்சந்தையின் நோக்கம் என்ன?
- கிராமப்பொருளாதார முன்னேற்றம்
- மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்
- வேலை வாய்ப்பினை ஏற்படுத்தல்
- கலப்படமற்ற பொருளை வழங்குதல்
தொல்காப்பியர் வகைப்படுத்திய ஆகுபெயர்கள் எத்தனை?
- ஏழு
- எட்டு
- பதினைந்து
- இருபது
'இரண்டு கிலோ கொடு' எவ்வகை ஆகுபெயர்?
- முகத்தலளவை
- எடுத்தலளவை
- எண்ணலளவை
- நீட்டலளவை
கீழ்க்கண்டவற்றுள் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?
a ) பிறரிடம் செலுத்துதல்
b) பழிக்கு நாணுதல்
c) அனைவரிடமும் இரக்கம், இணக்கம், உண்மையோடு இருத்தல்
d) பணிவுடன் நடத்தல்
- a), b), d) சரி
- a), b), c) சரி
- a), b) சரி
- a), d) சரி
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார்." இக்குறளில் பயின்று வரும் அணி எது?
- உருவக அணி
- வேற்றுமை அணி
- ஏகதேச உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
தமிழர் அழகியலின் வெளிப்பாடு?
- ஓவியங்கள்
- சிற்பங்கள்
- நடனம்
- மனையியல்
கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் திறன் பெற்றவர்?
- சு.வில்வ ரத்தினம்
- சு.முத்து
- நா.முத்துக்குமார்
- யுகபாரதி
ஐங்குறுநூற்றில் அமைந்த மருதத்தினைப் பாடலைகளைப் பாடியவர்?
- அம்மூவனார்
- பேயனார்
- ஓரம்போகியார்
- ஓதலாந்தை
ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் யார்?
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- நன்னன்சேய் நன்னன்
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
கீழ்க்கண்டவற்றுள் யானையைக்குறிக்கும் சொற்கள் எவை?

a) களபம்
b) மாதங்கம்
c) வாரணம்
d) வேழம்
- d) மட்டும்
- a), b), c) சரி
- a), b) சரி
- a), b), c), d) சரி
ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு எது?
- யானை டாக்டர்
- அறம்
- மத்தகம்
- ஊமைச்செந்நாய்
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதைத் தேர்ந்தெழுதுக.
- அங்கம்
- பஞ்சம்
- பண்டம்
- அப்பம்
அருணகிரிநாதரின் திருப்புகழ் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்?
- திருமுருகன் பள்ளு
- காவடிச்சிந்து
- வீரைத்தலபுராணம்
- சங்கரன்கோவில் திரிபந்தாதி
வெள்ளிவீதியார் இயற்றிய பாடல் இடம்பெற்ற நூல்?
- பதிற்றுப்பத்து
- கலித்தொகை
- குறுந்தொகை
- நற்றிணை
"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்"
- என்று கூறியவர்?
- கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
- நெடுஞ்செழியன்
- கருணாகரத்தொண்டைமான்
- நக்கீரர்
நட்சத்திர மாலை என்னும் நூலை எழுதியவர்?
- பூரணலிங்கனார்
- ஆறுமுக நாவலர்
- சி.வை.தாமோதரனார்
- வீரமாமுனிவர்
அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
சிவகங்கை அரசுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்தவர்?
- மீரா
- மேத்தா
- பிரமிள்
- ஈரோடு தமிழன்பன்
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் எந்தத்தலைப்பில் நடைபெற்றது?
- அழகு
- தமிழ்
- எழில்
- குறள்
குண்டலகேசி நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் எது?
- நாககுமாரக் காவியம்
- யசோதரக் காவியம்
- உதயணக்குமாரக்காவியம்
- நீலகேசி
"வறிது நிலைஇய காயமும்" என்ற புறநானூற்று அடிகளை எழுதியவர்?
- புல்லாங்காடனார்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- மாங்குடி மருதனார்
- பெருங்கெளசிகனார்
அறிவியல் தமிழின் முன்னோடி என்று போற்றப்படுபவர்?
- சேக்கிழார்
- கபிலர்
- பெ.நா.அப்புசாமி
- நெ.துரை வையாபுரி
தவறாக பொருந்தியுள்ள இணையைத்தேர்க.
- அக்னிச்சிறகுகள் - அப்துல்கலாம்
- அறிவியல் தமிழ் - வா.செ.குழந்தைசாமி
- கணினியை விஞ்சும் மனிதமூளை - கா. விசயரத்தினம்
- பொங்கியெழு கேணி - அழகிய பெரியவன்
'புலியிடம் ஆடு மாட்டிக் கொண்டது' என்ற விடைக்கேற்ப வினாவைத்தேர்ந்தெடு.
- ஆடு மாட்டிக் கொண்டதா?
- எதனிடம் ஆடு மாட்டிக்கொண்டது?
- ஆடு புலியிடமா மாட்டிக்கொண்டது?
- எங்கே ஆடு மாட்டிக்கொண்டது?
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் - எவ்வகை வாக்கியம்
- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
- செயப்பாட்டு வாக்கியம்
முருகன் அடங்கினான் - எவ்வகைத்தொடர்?
- தன்வினைத்தொடர்
- பிறவினைத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செயப்பாட்டுவினைத்தொடர்
'சுதந்திரப்பறவை போல' என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருளைத்தேர்க.
- மகிழ்ச்சி
- விரைவு
- விடுதலை
- தியாகம்
அடிதோறும் இறுதிச்சீரின் இறுதி ஒன்றிவரத்தொடுப்பது?
- மோனை
- எதுகை
- இயைபு
- முரண்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - இதில் அமைந்துள்ள தொடை?
- இயைபு
- அந்தாதி
- பொழிப்பு
- ஒரூஉ
கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
- அறிஞர் அண்ணா
- முத்துராமலிங்கர்
- பெரியார்
- பாரதிதாசன்
ஆசியக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நூலகம் எது?
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- கல்கத்தா தேசிய நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
- லைப்ரரி ஆப் காங்கிரஸ்
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக்கொண்டது?
- 100
- 150
- 300
- 200
அக்காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது எது?
- மாட்டுப்பொங்கல்
- காணும்பொங்கல்
- போகித்திருநாள்
- பொங்கல் திருநாள்
தூயவர் செயல்களாக திரிகடுகம் குறிப்பிடுபவை யாவை?
a) நீராடிய பின் உண்ணுதல்
b) பெரும்பயன் கிடைத்தாலும் பொய் சாட்சி சொல்லாதிருத்தல்
c) வறியவர்க்கு பொருளை அளித்தல்
d) எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல்
- a), b) சரி
- a), c) சரி
- அனைத்தும் சரி
- a) மட்டும் சரி
திருவாரூர் நான்மணிமாலையில் குறிப்பிடப்படும் நால்வகை மணிகளுள் இல்லாத ஒன்று எது?
- மரகதம்
- மாணிக்கம்
- கோமேதகம்
- பவளம்
நான்மாடக்கூடலுக்கு பெயர்க்காரணம் கூறியவர்?
- இளங்கோவடிகள்
- சேக்கிழார்
- சுந்தரர்
- பரஞ்சோதியார்
கல்வெட்டில் மதுரை என்னும் பெயர் எவ்வாறு காணப்படுகிறது?
- மருதை
- மதிரை
- ஆலவாய்
- கூடல்
பார்வதிநாதன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?
- கண்ணதாசன்
- தெ.பொ.அப்புசாமி
- மீ.இராசேந்திரன்
- வாலி
பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கல்லை மேலெறிந்து பிடித்து விளையாடுவது?
- அம்மானை
- கழங்கு
- ஊசல்
- ஐந்தாம் கல்
ஆஸ்தி என்ற பிறமொழிச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
- தொடக்கம்
- சாம்பல்
- சொத்து
- துன்பம்
தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய ஆறுகள் கூடும் இடத்திற்கு எத்திசையில் உள்ளது முக்கூடல்?
- தெற்கு
- வடக்கு
- கிழக்கு
- மேற்கு

கோழியூர் எனப்பெயர்கொண்ட சோழர் தலைநகரம் எது?
- தஞ்சாவூர்
- உறந்தையூர்
- திரிசிராபுரம்
- கரந்தை
ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?
- 42
- 32
- 52
- 45
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச்செய்வீர்" என்று பாடியவர்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- தமிழ்ஒளி
திருத்தக்கதேவர் வாழ்ந்த காலம்?
- பத்தாம் நூற்றாண்டு
- ஒன்பதாம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
- பதினோராம் நூற்றாண்டு
கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- வட்டிகைச்செய்தி
- புனையா ஓவியம்
- சுவரோவியம்
- ஓவிய எழினி
ஞாயிற்றைச்சுற்றியுள்ள பாதையை ஞாயிற்று வட்டம் என்று கூறும் நூல்?
- அகநானூறு
- புறநானூறு
- நெடுநல்வாடை
- மதுரைக்காஞ்சி
கலீலியோவிற்கு முன்பு வானியல் பற்றிய கொள்கைகளை வெளியிட்டவர்கள்?
- அரிஸ்டாட்டில்
- தாலமி
- கோபர்நிகஸ்
- A) மற்றும் B)
வில்லி பாரதத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை?
- 4350
- 3450
- 5430
- 2350
"தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்." என்று பாடியவர்?
- முடியரசன்
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- தாராபாரதி
அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்தபோது இயற்றிய செய்யுள் நூல் எது?
- திலகர் புராணம்
- குழந்தை சுவாமிகள் பதிகம்
- காந்தி புராணம்
- இராமலிங்க சுவாமிகள் சரிதம்
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
- 1780
- 1782
- 1784
- 1778
அஞ்சலையம்மாளின் மகளை காந்தியடிகள் எங்கு அழைத்துச்சென்று படிக்க வைத்தார்?
- சபர்மதி
- புனே
- வார்தா
- டெல்லி
இயேசு பெருமானின் வளர்ப்புத்தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக்கொண்டு பாடப்பட்ட நூல் எது?
- இரட்சணிய யாத்திரிகம்
- இரட்சணிய மனோகரம்
- தேம்பாவணி
- இயேசு காவியம்
நாடகக்கலையைப்பற்றியும், காட்சித்திரைகளைப்பற்றியும், நாடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாகக்கூறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- மதிவாணர் நாடகத்தமிழ் நூல்
- விளக்கத்தார் கூத்து
- கூத்து நூல்
சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு?
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
சரயு நதி பாயும் மாநிலம் எது?
- உத்தரகாண்ட்
- உத்திரப்பிரதேசம்
- மத்தியப்பிரதேசம்
- மராட்டியம்
மூவறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?
- எறும்பு
- வண்டு
- நண்டு
- நத்தை
மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றவர்?
- பரிதிமாற்கலைஞர்
- தேவநேயப்பாவாணர்
- பெருஞ்சித்திரனார்
- மறைமலையடிகள்
சிலப்பதிகாரத்திலுள்ள மொத்த காதைகளின் எண்ணிக்கை?
- 30
- 32
- 28
- 33
பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருவாரூர்
- புதுவை
"ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும்" என்று கூறியவர்?
- பாரதிதாசன்
- வள்ளலார்
- பாரதியார்
- பெரியார்
"பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்" இவ்வடிகளில் பண்ணவன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
- இராமன்
- குகன்
- இலக்குவன்
- இராவணன்
அம்பேத்கர் எங்கு சென்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்?
- மும்பை
- இலண்டன்
- அமெரிக்கா
- இத்தாலி
அடுக்குத்தொடர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்க.
a) சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
b) பிரித்தால் பொருள் தரும்
c) இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்
d) இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்
- b), c), d) சரி, a) தவறு
- b), c) சரி
- a), b), c) சரி, d) தவறு
- அனைத்தும் சரி
மடக்கொடி என்ற சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு தருக.
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை
- உவமைத்தொகை
- பெயரெச்சம்
கீழ்க்கண்டவற்றுள் பொதுமொழியாக வருபவை எவை?
- பலகை
- தாமரை
- வைகை
- இவை அனைத்தும்
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' இத்தொடரில் குறிக்கப்படும் துகிர் என்ற சொல்லின் பொருள்?
- மாணிக்கம்
- மரகதம்
- பவளம்
- கோமேதகம்
உயர்ந்தோங்கி - இலக்கணக்குறிப்பு தருக.
- இனமொழி
- ஒருபொருட்பன்மொழி
- குறிப்பு வினையெச்சம்
- இருபெயரொட்டுப்பண்புத்தொகை
பொம்மைகளைக்கொண்டு தயாரிக்கும் படங்கள்?
- இயங்குறு படங்கள்
- கருத்துப்படம்
- செய்திப்படம்
- விளக்கப்படம்
எம்.ஜி.ஆர். இன் பணிகளைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் எது?
- அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
- தமிழ்ப்பல்கலைக்கழகம்
- சென்னைப் பல்கலைக்கழகம்
- அண்ணாப் பல்கலைக்கழகம்
கீழ்க்கண்டவற்றுள் இசை மரபுகளை வெளிப்படுத்தாத நூல் எது?
- தொல்காப்பியம்
- சங்கஇலக்கியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
கி.மு மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கட்டட இடிபாடுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
- கீழடி
- கொடுமணல்
- கோவை
- கீழார்வெளி
"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று கூறியவர்?
- திருஞான சம்மந்தர்
- திருநாவுக்கரசர்
- குலசேகர ஆழ்வார்
- மாணிக்க வாசகர்
அச்சமில்லை அச்சமில்லை எனும் பாரதியின் பாடலுக்கு முன்னோடி?
- திருத்தாண்டகப்பாடல்
- திருவாய்மொழி
- பெரிய திருமொழி
- திருக்குறள்
சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
- 5615
- 5027
- 5680
- 5720
யாருடைய வழிகாட்டுதலால் காந்தி தமிழ் பயிலத்தொடங்கினார்?
- ஸ்மட்ஸ்
- தால்சுதாய்
- மதன்மோகன்மாளவியா
- நேரு
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!